ஹேப்பி நியூஸ்.. சாந்திக்கு 12வது குழந்தை பிறந்திருச்சு.. வீட்டுலதான்.. சுகப்பிரசவம்தான்!

THE NEWS INDIA (24/7 TAMIL NEWS NETWORK)..திருச்சி: ஒரு ஹேப்பி நியூஸ்!! சாந்திக்கு குழந்தை பிறந்திடுச்சாம்… எந்த சாந்தி தெரியுமா? ஆஸ்பத்திரி பக்கமே பிரசவத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நர்சுகளை எல்லாம் அலற விட்டு ஓட விட்டாரே… அந்த சாந்திக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது!! முசிறியை சேர்ந்த காதல் ஜோடிதான் கண்ணன்-சாந்தி. கண்ணனுக்கு 47 வயது, சாந்திக்கு 45 வயது. 20 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சு. இவங்களுக்கு 11 குழந்தைகள். இதில் 3 மகள்களுக்கு கல்யாணம் ஆகி சாந்தியும் – கண்ணனும் தாத்தா, பாட்டி ஆகிவிட்டார்கள். ஆனாலும் சாந்தி 12-வதாக கர்ப்பம் ஆனார். இந்த விஷயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியவர, பிறகு தாய், சேய் நல அலுவலரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களும் சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வர அவரது வீட்டுக்கு போனார்கள். ஆனால் சாந்தி எஸ்கேப்!! நர்சுகள் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதை பார்த்த சாந்தி, காவிரி ஆற்றங்கரை பக்கம் அவசர அவசரமாக கிளம்பி போய் மறைந்து கொண்டார்.

Related posts

Leave a Comment