மறைந்தார் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்!

THE NEWS INDIA 24/7 NATIONAL TAMIL NEWS NETWORK….சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அவர் சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

98-வயது

திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98 ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது தனது 96 வயது வரை மிக ஆக்டிவாக இயங்கி வந்த அவருக்கு வயது மூப்பு காரணமாக நடை குறைந்தது. பின்னர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்த அவர் முழுவதும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சுழற்சி முறையில் செவிலியர்களை பணியமர்த்தியது பிரபல தனியார் மருத்துவமனை.

Related posts

Leave a Comment