கும்பல்ல கோயிந்தா போடுறது பிடிக்காது.. சைலண்டா அடிப்பேன்! மீடூ பற்றி நித்யா மேனன்!

THE NEWS INDIA(TNI 24 NEWS TAMIL NETWORK)…சென்னை: மீடூ விஷயத்தில் என் வழி தனி வழி என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திரைப்படத் துறையில் புயலைக் கிளப்பிய மீடூ விவகாரம் தற்போது இந்தியாவில் பரவலாக பேசப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என மீடூ விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை நித்யா மேனன், மீடூ தொடர்பான கருத்தை பதிவு செய்துள்ளார். மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன்.

இதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். இதுபோன்ற செய்கைகளினால் சில படங்களிலிருந்து வெளியேறி இருக்கிறேன். நான் பணியாற்றும் இடத்தில் எப்படி இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகள் என்ன? மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்கிறேன் ஆகியவை இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எதிரானவள் என்பதை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு புரியவைக்கும். என்னுடைய படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அது புரியும் எனக் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment