தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?- கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கேப்டன்… ஒரு பரபரப்பு சர்வே

THE NEWS INDIA(TNI 24 NEWS NETWORK…TAMIL)…சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்பது குறித்து இந்தியா டுடே ஒரு பரபரப்பு சர்வேயை தமிழகத்தில் எடுத்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதியை அடுத்து தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன், நான் வருகிறேன் என பலர் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள். எனினும் தமிழகத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்படவே இல்லை. நாங்கள் இருக்கிறோம் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி கூறிவருகிறது. இந்நிலையில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர். அவ்வாறு செய்யும் பட்சத்தில் தகுதி நீக்கம் செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் அதிமுக அரசுக்கு பிரச்சினை. செல்லும் என்றால் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக தலையெடுக்குமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. இந்நிலையில் தமிழக மக்களின் நாடித் துடிப்பை இந்தியா டுடே பார்த்துள்ளது.

Related posts

Leave a Comment