மீண்டும் வருகிறான் தேவர்மகன்… கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

THE NEWS INDIA(TNI 24 NEWS NETWORK)…சென்னை: இந்தியன் 2 திரைப்படம் முடிந்தவுடன் தேவர்மகன் 2 படத்தில் நடிக்க போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், கமல் இணைந்து நடித்தப்படம் தேவர்மகன். கடந்த 1992ம் ஆண்டு வெளியான இப்படம், மாபெரும் வெற்றி பெற்றது.

சாதி மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், மாயன் என்ற கதாபாத்திரத்தில் நாசர் வில்லனாக நடித்திருப்பார். ரேவதி, கௌதமி, ரேணுகா, தலைவாசல் விஜய், வடிவேலு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கும். தேவர்மகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படம் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. [கேம் ஓவர்… வீல் சேரில் உட்கார்ந்து விளையாடும் டாப்ஸி!] இந்நிலையில்

தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல் தனது முந்தைய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன்படி விஸ்வரூபம் 2 சமீபத்தில் வெளிவந்தது. இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment